ட்ரெண்டிங்

காவல் நிலையத்தில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

 

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த மர்மபொருள் திடீரென வெடித்ததில் மேற்கூரைச் சிதறியது. அந்த சிதறிய மேற்கூரை சாலையில் நடந்துச் சென்ற மியாமத்துல்லா என்பவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மேலும், புகார் கொடுக்க வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயங்களுடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுடன் விசாரணை நடத்தினார்.