சேலத்தில் கல்லூரி பேருந்து விபத்தில் மாணவ,மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம்,
விபத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்....
சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியின் பேருந்து சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது கல்லூரி பேருந்திற்கு முன்பாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பிரேக் பிடித்து நின்ற நிலையில்,பின்னே வந்து கொண்டிருந்த கல்லூரி பேருந்து அரசின் பேருந்து மீது மோதியது.இந்த விபத்தில் தனியார் கல்லூரி பேருந்தில் முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.இந்த விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பத்திற்கு மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.
பின்னர் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பேருந்து விபத்தால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பின்னர் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து செய்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

--(7)-MOeKOF5Ibu.jpg )
