ட்ரெண்டிங்

சாலை, எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்!

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட சூரப்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டம்பட்டி முதல் தாசனூர் வரையில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளருமான சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, சின்னக்கவுண்டம்பட்டியில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளையும், தாரமங்கலம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளையும், சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளருமான முனைவர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, இ.ஆ.ப. உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.