ட்ரெண்டிங்

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய கிறிஸ்துமஸ் தாத்தா!

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 

ஓடும் ரயிலில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும், விமான நிலையத்திற்கு முன்கூட்டியே பயணிகள் வருவதைப் போல, ரயில் நிலையத்திற்கும் பயணிகள் வர வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்களுடன் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகளை வழங்கி, ரயில்வே விதிமுறைகளை எடுத்துரைத்தார். பெரியவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

 

கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்ட குழந்தைகள், அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டும் உற்சாகம் அடைந்தனர்.