ட்ரெண்டிங்

பள்ளம் மூடப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்!

 

சேலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக, வீடுகளின் வாசலில் சுரங்கம் போல் பள்ளம் தோண்டப்பட்டதால், ஆபத்து நேரிடும் என குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி முதல் நெத்திமேடு வரை உள்ள சாலையில் மழைக்காலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, வீடுகளின் வாசலுக்கு முன்பாக சுரங்கம் போல் வடிகால் கால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதில் ஆபத்து இருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி, வடிகால் கால்வாய் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று உறுதியளித்ததன் பேரில், மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மக்களின் போராட்டம் காரணமாக, அந்த அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.