ட்ரெண்டிங்

தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பதவி நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி!

சேலம் மாவட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பைத்தூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வி மீது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி முறைகேடு செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து, ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கலைச்செல்வியைப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தேவியக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா மீது பொதுமக்கள் வைத்த குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவரையும் பதவி நீக்கம் செய்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நாளில் ஆளுங்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களை அடுத்தடுத்து, ஆட்சியரால் பதவி நீக்கம்