ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு!

 

சேலம் மாவட்டத்தில் தும்பிப்பாடி, தலைவாசல், நத்தக்கரை, நங்கவள்ளி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (டிச.16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, நங்கவள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி ,சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தும்பிப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனீஷ்பேட்டை, கொங்குபட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்னதிருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரிய சாத்தப்பாடி, சின்ன சாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, கட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பாடி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (டிச.16) காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைவாசல், நத்தக்கரை துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தலைவாசல், நத்தக்கரை, ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணி விழுந்தான் காலனி, மணி விழுந்தான் வடக்கு, மணி விழுந்தான் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.