ட்ரெண்டிங்

வேண்டுகோள் வைத்த எம்.எல்.ஏ. அருள்... நிறைவேற்றிய நெடுஞ்சாலைத் துறை!

 

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் சேகோசர்வ் முதல் இரும்பாலை வரை தற்போது சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவது பாராட்டுக்குரியது இந்நிலையில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோர பூங்காக்கள், குறுங்காடுகள் அமைத்து அதற்கு வேலி அமைத்துத் தர வேண்டும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஆக்கிரமிக்காமல் தடுக்கப்படுவதுடன் இந்த சாலையும் பசுவை வழிச்சாலையாக மாறும்.

 

எனவே இருபுறமும் நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை நட்டு வளர்த்திடும் வகையில் ஆவன செய்திட வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடிதம் எழுதியிருந்தார். 

 

இதனையேற்று, அந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரங்களை நப்பட்டு வருகிறது. இதனை எம்.எல்.ஏ. அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், நெடுஞ்சாலைத் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்