ட்ரெண்டிங்

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 

சேலத்தில் இன்று (ஜூன் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று (ஜூன் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 10- ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடும். 

வரும் ஜூன் 08- ஆம் தேதி முதல் ஜூன் 12- ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.