ட்ரெண்டிங்

மிக்ஜாம் புயல், கனமழை எதிரொலி- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் ரத்து!

 

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சேலம் வழியாக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரயில் தண்டவாளங்கள் மற்றும் மேம்பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20644), கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12680), சென்னை சென்ட்ரல்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12675), சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12243) ஆகிய நான்கு ரயில் சேவைகள் இன்று (டிச.04) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு முன்பதிவுச் செய்துள்ள பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.