ட்ரெண்டிங்

புயல் எச்சரிக்கை: சேலம் வழியாகச் செல்லும் 36 ரயில் சேவைகள் ரத்து!

 

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக, சேலம் வழியாக செல்லும் 36 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, டிசம்பர் 03- ஆம் தேதி முதல் டிசம்பர் 07- ஆம் தேதி வரை சேலம் வழியாக இயக்கப்படும் 36 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

அந்த வகையில், கொச்சுவேலி - கோர்பா எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில், பிளாஸ்ப்பூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி- பிளாஸ்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், செகந்திராபாத்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை- சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில், சலிமார்- நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்றா எக்ஸ்பிரஸ் ரயில், செகந்திராபாத்- கொல்லம் சிறப்பு ரயில், ப்ரௌனி- கோவை சிறப்பு ரயில், நரஸ்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில் உள்ளிட்ட ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

ரத்துச் செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவுச் செய்துள்ள பயணிகளுக்கு கட்டணங்கள் திருப்பித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.