ட்ரெண்டிங்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிககள் !

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டம், நான்கு ரோடு அருகே அரிசிப்பாளையத்தில் உள்ள புனித மரியனை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 01) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து, சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், முதன்மைக்  கல்வி அலுவலர் கபீர் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.