ட்ரெண்டிங்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய தியாகு வள்ளியப்பா!

 

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பள்ளி குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு போட்டிகளில், சேலம் மாவட்டத்தில் உள்ள 60- க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 1.500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளர், கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல், வினாடி வினா, பாடல் மற்றும் இசை, பேச்சு போட்டி, பழம் மற்றும் காய்கறி செதுக்குதல், மைம், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டுகள் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர் செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

 

அப்போது பேசிய அவர், சோனா கல்லூரி கல்வியில் மட்டுமல்லாது, ஒவ்வொரு மாணவரிடம் உள்ள தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய திறமைமிக்க ஆசிரியர்களையும், மாணவர்கள் வளர்ச்சி பணியில் அக்கரைக் கொள்ளும் கல்லூரியின் முதல்வரையும் வெகுவாகப் பாராட்டினார்.