ட்ரெண்டிங்

AI தொழில்நுட்பத்தால் கலை உலக சகோதரிகளுக்கு தலைகுனிவு-கவிஞர் வைரமுத்து பேட்டி!

 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் கலை உலக சகோதரிகளுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 

சேலம் சண்முகா மருத்துவமனையின் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, கவிஞர் செந்தமிழ்த்தேனீ எழுதிய சேலத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பெருமைக்குரியவர்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தை சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து, "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னேற்றப் பாதைக்கு பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு பின் உலகம் இரண்டாகப் பிளவுப்படப் போகிறது. செயற்கை நுண்ணறிவுக்கு முன், செயற்கை நுண்ணறிவுக்கு பின் என இரண்டாகப் பிளவுப்படப் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.