ட்ரெண்டிங்

நடிகர் சூர்யா விரைவாகக் குணமடைய வேண்டி சின்னக்கடை மாரியம்மன் கோயிலில் பூஜை!

 

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யாவுக்கு தோல்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

 

நடிகர் சூர்யா மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின் படி, ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றம் சார்பில், சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சின்னக்கடை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.