ட்ரெண்டிங்

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, சேலம் கடைவீதிகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள வ

 

கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (நவ.26) கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம், அஸ்தம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் களிமண்ணால் செய்யப்பட்ட வித விதமான அகல் விளக்குகள் குவிக்கப்பட்டுள்ளன. அதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

 

அதேபோல், தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய் மற்றும் நெய், நூல் திரிகள், கற்பூரம், தீப்பெட்டிகள் ஆகியவற்றையும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

 

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,கடந்த ஆண்டை விட, இந்தாண்டு மண் விளக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பீங்கான் உள்ளிட்ட வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்த போதிலும், பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், மூலப்பொருட்களின் விலை உயர்வால், மண் விளக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் மண் விளக்குகளை ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

 

இதனால் சேலம் மாநகரில் உள்ள கடைவீதிகளில் கார்த்திகைத் திருவிழாவிற்கான பூஜை சாமானங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.