சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் திடலில், சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று (நவ.22) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை; ஆனால் அவர்கள் இறந்த பிறகு பா.ஜ.க. அடிமைகள் விட்டுக்கொடுத்து விட்டனர். நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளைப் பெற்று தி.மு.க.
இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதலமைச்சரிடம் ஒப்படைப்போம்; இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பூட்டு, சாவி கதையைக் கூறினார். அப்போது அவர் கூறியதாவது, பூட்டு ஒன்றைத் திறப்பதற்காக, அதன் தலையின் மீது மிகப்பெரிய சுத்தி ஒன்றினை கொண்டு மத்திய அரசு ஓங்கி அடிக்கிறார்கள். ஆனால் அதை திறக்க முடியவில்லை ஆனால் சிறிய சாவி அதை திறந்துவிட்டது.
அப்போது நீ மட்டும் எப்படி பூட்டை திறந்தாய் என சுத்தியல் சாவிடம் கேட்டது. அதற்கு சாவி பதிலளித்தபோது, நான் பூட்டின் இதயத்தைத் தொட்டேன்.ஆனால் நீ தலையின் மீது அடித்தாய் என்று சொன்னது.
இதன்மூலம் கூறுவது என்னவென்றால், தமிழக மக்களின் தலையில் மத்திய அரசு ஓங்கி ஓங்கி அடித்தாலும், அது பலனளிக்காது. ஆனால் தமிழக மக்கள் சாவியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள். எனவே அவரால் மட்டுமே மக்களின் மனதை தொட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)