ட்ரெண்டிங்

ஆக்கிரமிப்புச் செய்யப்படும் சரபங்கா நதி!

 

ஓமலூரில் உள்ள சரபங்கா நதியின் கரைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதால், அவை சிறு ஓடைகளாகச் சுருங்கி வருகின்றது. 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா நதி வறண்டுள்ளதால், பெரும்பாலான பகுதிகள் தனிநபர்களால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கட்டுமானங்கள் மற்றும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. சேலம் தோல் பதப்படுத்தும் மையங்களின் கழிவுகள் ஆகியவை நேரடியாக, ஆற்றில் கலப்பதால் கழிவுநீர் குட்டைப் போல் காட்சியளிக்கிறது. 

 

சீமைக்கருவேல மரங்களால் கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்க்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆற்றின் தூய்மை மற்றும் சுகாதாரம் மிகவும் கேள்விக் குறியாகியுள்ளது. 

 

இது குறித்து பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,தற்போது ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவற்றை அகற்றப்பட்டு, சீரமைக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.