ட்ரெண்டிங்

உலக அஞ்சல் தினத்தையொட்டி சேலத்தில் 6500 மாணவர்கள் ஒரே நேரத்தில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி

உலக அஞ்சல் தினத்தில் சேலத்தில் பள்ளி மாணவர்கள் 6500 பேருக்கு அஞ்சல் அட்டையை வழங்கி அதில் அவர்கள் எண்ணங்களை கருத்துக்களை கடிதமாக எழுத வைத்து அந்த கடிதங்களை அவர்களையே அஞ்சல் பெட்டியில் போட வைக்கும் ஒரு உற்சாக விழிப்புணர்வு செயல்பாட்டின் துவக்க நிகழ்வு கடித ஆர்வலர் ஈசன் இளங்கோ முயற்சியில் உலக அஞ்சல் தினமான இன்று 09-10-2023 திங்கட்கிழமை காலை 8-00 மணிக்கு சேலம் ஹோலிகிராஸ் பள்ளியில் நடைபெற்றது 

கடித ஆர்வலர் ஈசன் இளங்கோ மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் அட்டைகளை வழங்கி 

கால மாற்றத்தில் நாம் இழந்து வரும், இழக்கக்கூடாத ஒரு சிறந்தநல்ல பழக்கம் கடிதம் எழுதுதல்..

கடிதங்கள் மொழியாற்றல் அறிவாற்றல் கற்பனைசக்தி இவற்றை

அதிகரிக்க உதவுகின்றது.

உணர்வு பூர்வமாக எழுதப்படும் கடிதங்கள் உறவுகளை மேம்படுத்துகின்றது.

எனவே இந்த உலக அஞ்சல் தினத்தில் இருந்து மாணவர்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை துவங்க வேண்டும்

கல்வி பொது அறிவை வளர்கின்றது கடிதங்கள் சுய அறிவை மேம்படுத்துகின்றது 

எனவே கட்டாயம் மாதம் இரு கடிதங்களாவது மாணவர்கள் எழுதி அனுப்ப வேண்டும்.

கடிதம் எழுதும் பழக்கம் உங்களை வாழ்வில் மிக உயர்ந்த நல்ல நிலைக்கு நிச்சியம் அழைத்து செல்லும்.

எனவே தொடந்து கடிதங்களை எழுதுவோம் கடித இலக்கியத்தை மீட்டெடுப்போம் என மாணவர்களிடையே பேசினார்.தொடர்ந்து மாணவர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி கடிதங்களை எழுத வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் துறையால் அங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த அஞ்சல் பெட்டியில் வரிசையாக நின்று மகிழ்வுடன் அஞ்சல் செய்தனர்.இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் சேசுராஜ். அருட்சகோதரர்கள் குழந்தைசாமி ஏசுதாசன் பள்ளி துனை முதல்வர் எட்வர்ட் ஜோசப் சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் துறை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.