ட்ரெண்டிங்

உழவர் சந்தைகளில் வெண்டைக்காய், தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி!

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்திச் செய்த விளைப்பொருட்களை இங்கு கொண்டு நேரடி விற்பனை செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில், சேலம் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீரபாண்டி, மேச்சேரி, தேவூர், அயோத்தியாபட்டிணம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து உழவர் சந்தைக்கு விவசாயிகள் அதிகளவில் வெண்டைக்காயைக் கொண்டு வந்ததால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ வெண்டைக்காயின் ரூபாய் 8 முதல் ரூபாய் 10 வரை விற்பனைச் செய்யப்படுகிறது.

 

அதேபோல், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ தக்காளி ரூபாய் 10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் மற்றும் தக்காளியின் விலை வீழ்ச்சிக் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ள நிலையில், வெண்டைக்காய் மற்றும் தக்காளியை பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது.