ட்ரெண்டிங்

வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை-மாநகராட்சிக் கூட்டத்தில் ஈசன் இளங்கோ

 

சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் இன்று (அக்.30) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி கூட்டரங்கில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பொறுப்பு ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில், துணை மேயர் சாரதா தேவி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, "மாநகராட்சி பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை தொய்வின்றி செய்ய மாநகர் முழுவதும் சாலைகளின் அடியில் செல்லும் குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அனைத்து வகை குழாய்கள் மற்றும் புதைவழி கம்பிகள் மற்றும் அனைத்து கேபிள்களும் எந்தெந்த இடத்தில் எத்தனை எந்த அளவில் பதிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறித்த ஒரு புதிய வரைபடத்தை களஆய்வு செய்து தயாரிக்க வேண்டும்.

 

சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கெடுக்கும் நோக்கில் காரணமின்றித் தடுப்பவர்கள், வேண்டுமென்றே சுயநலத்துடன் இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் அவர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், உடனடி நடவடிக்கையும் எடுக்க வேண்டும்" என்று கோரினார்.