ட்ரெண்டிங்

சேலம் தினம் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி... உற்சாகமடைந்த இளைஞர்கள்!

 

சேலம் தினம் வரும் நவம்பர் 01- ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதனை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலாச்சார கலை  நிகழ்ச்சியில் 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்ட தினமான நவம்பர் 01- ஆம் தேதி சேலம் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சேலம் தினம் கொண்டாடப்படுவது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையிலும், போதைப்பொருள் பழக்கத்தைத் தவிர்த்திட விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் மாநகராட்சியின் முதல் மேயர் சூடாமணி, தற்போதைய மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் சந்திர மௌலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது, அவர்கள் சேலம் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, வாய்ப்பாட்டு, பரதம், தமிழர்களின் வீரம் மற்றும் தற்காப்புக் கலைகளான அடிமுறை, சிலம்பாட்டம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றனர்.

இறுதியில் திரைப்பட இசை ஒலிக்கப்பட்டு, அனைவரும் நடனமாடிக் கொண்டாடி உற்சாகமடைந்தனர்.