ட்ரெண்டிங்

ஆயுதபூஜை அன்று உழவர் சந்தைகளில் ரூபாய் 1.14 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை!

 

கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் ரூபாய் 1.14 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக சேலம் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக, சூரமங்கலம் உழவர் சந்தையில் அன்றைய தினத்தில் மட்டும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என 24.26 லட்சம் ரூபாய்க்கும், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் 21 லட்சம் ரூபாய்க்கும், அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் 9.11 லட்சம் ரூபாய்க்கும், அம்மாப்பேட்டையில் 8.10 லட்சம் ரூபாய்க்கும், ஆத்தூர் உழவர் சந்தையில் 20.39 லட்சம் ரூபாய்க்கும், இளம்பிள்ளை உழவர் சந்தையில் 4.6 லட்சம் ரூபாய்க்கும், எடப்பாடி உழவர் சந்தையில் 4.61 லட்சம் ரூபாய்க்கும், மேட்டூர் உழவர் சந்தையில் 10.2 லட்சம் ரூபாய்க்கும், ஆட்டையாம்பட்டி உழவர் சந்தையில் 2.49 லட்சம் ரூபாய்க்கும், தம்மம்பட்டி உழவர் சந்தையில் 6.31 லட்சம் ரூபாய்க்கும் என மொத்தம் 1.14 கோடி ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.

 

வழக்கத்தை விட அதிகளவில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை அதிகளவில் விற்பனையானதாகக் கூறும் வியாபாரிகள், அதிக லாபம் கிடைத்ததாக மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.