ட்ரெண்டிங்

ஆயுதப்பூஜை படைப்பதற்கு சரியான நேரம் இதுதான்!

 

நவராத்திரி விழா கடந்த அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கியது. சேலத்தில் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கொலுப்படிக்கட்டுகள் மேல் படியில் கடவுள் உருவங்கள். அதற்கு அடுத்த படியில் ஞானிகள், மகான்கள், அடுத்தடுத்த படிகளில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் ரீதியிலான பொம்மைகளை வைத்து வழிபடுகின்றனர்.

 

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான சுண்டல்கள், புளியோதரை, பொங்கல், பொறி கடலை வைத்து படைக்கிறார்கள். ஒன்பது நாட்கள் மாலை துவங்கி இரவு வரை இந்த வழிபாடு நடக்கிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆயுதப்பூஜைக்கான சரியான நேரத்தை அர்ச்சகர்கள் கணக்கிட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, வரும் 23- ஆம் தேதி ஆயுதப்பூஜைத் தினத்தன்று காலை 06.00 மணி முதல் காலை 07.30 மணி வரையும், காலை 09.00 மணி முதல் காலை 10.30 மணி வரையும், நண்பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரையும், மாலை 04.00 மணி வரை முதல் 05.00 மணி வரையும் ஆயுதப்பூஜை படையிலிடுவதற்கான நேரம் என்றும், வரும் அக்டோபர் 24- ஆம் தேதி விஜயதசமி நாளில் வித்யாரம்பம் காலை 06.00 மணி முதல் காலை 08.50 மணிக்குள்ளும், முற்பகல் 10.25 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள்ளும் நிகழ்ச்சி நடத்தலாம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.