ட்ரெண்டிங்

ஆயுதப்பூஜையை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை- மங்களரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எ

 

ஆயுதப்பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சேலம் வழியாக சென்னை- மங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- மங்களூரு, மங்களூரு- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

அதன்படி, இன்று (அக்.20) இரவு 11.45 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் (அக்.21) மாலை 04.00 மணிக்கு மங்களூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்.21- ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அக்.22- ஆம் தேதி காலை 11.20 மணிக்கு எம்ஜி ஆர் சென்னை சென்ட்ரலைச் சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.