ட்ரெண்டிங்

நிறுவனங்கள் தொழிற்சாலை 4.0 இயந்திரம் பயன்படுத்தி உற்பத்தி செய்ய ஆட்சியர் வேண்டுகோள்! 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தொழிற்சாலை 4.0 மற்றும் மாவட்ட திறன் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (மார்ச் 05) நடைபெற்றது. 

பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, இன்றையதினம் தொழிற்சாலை 4.0 மற்றும் மாவட்ட திறன் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் தொழிற்சாலை 4.0 மையத்தில் வழங்கப்படும். பயிற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, 2024-25-இல் சேலம் மாவட்டத்தில் உள்ள 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள
அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச திறன் போட்டியில் அதிகளவிலான போட்டியாளர்களைப் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும் மார்ச் / ஏப்ரல் மாதங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தொழிற்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் ஐ.டி.ஐ மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கு தொழிற்சாலை சார்ந்து பயிற்சி கட்டணத்துடன் கூடிய பயிற்சி வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வருவாய் ஈட்டும் பொருட்டு தொழிற்சாலை நிறுவனங்கள் தொழிற்சாலை 4.0 இயந்திரம் பயன்படுத்தி உற்பத்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.