ட்ரெண்டிங்

தி.மு.க., பா.ஜ.க. வாக்கு விகிதம் குறைந்துள்ளது- எடப்பாடி பழனிசாமி பேட்டி! 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதன்முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைச் செய்தார். பிரதமரின் ரோடு ஷோ மற்றும் ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் தமிழகத்தில் பரப்புரைச் செய்தனர். தி.மு.க.வில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பரப்புரை மேற்கொண்டனர். 

அ.தி.மு.க. சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழகம் முழுவதும் பரப்புரைச் செய்தேன். அ.தி.மு.க. சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழகம் முழுவதும் பரப்புரைச் செய்தேன். தே.மு.தி.க.வில் பிரேமலதாவும் பரப்புரைச் செய்தார். பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் உயரவில்லை; குறைந்திருக்கிறது. 2019-ஐ விட தற்போது 1% வாக்குகளை அ.தி.மு.க.அதிகம் பெற்றிருப்பதை வெற்றியாகப் பார்க்கிறேன்

2019 தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணியோடு பா.ஜ.க. பெற்ற வாக்கை விட 2024- ல் குறைவாகவே உள்ளது. 2019 தேர்தலுடன் ஒப்பிடும் போது தி.மு.க.வின் வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.