ட்ரெண்டிங்

சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை நேரில் ஆய்வுச் செய்த அருள் எம்.எல்.ஏ.!

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 22வது வார்டு சிவதாபுரத்தில் பெருமழை காலங்களில் சேலத்தான்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட தேங்காமல் வெளியேற்றும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சனை குறித்து பா.ம.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று, அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையியல், சித்தர் கோயில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ. உடனடியாக நேரில் சென்று சாக்கடை பணி நடைபெற்று வரும் இடத்தை பார்வையிட்டு பகுதி மக்களின் சந்தித்துப் பேசினார். அத்துடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும் இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் சேர்ந்து நானும், சாலை மறியல் செய்வேன் என கூறியதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியைத் தொடங்கினர்.