ட்ரெண்டிங்

மேட்டூர் அணையில் இருந்து வந்த தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து குள்ளம்பட்டி கால்வாய் வழியாக வந்த தண்ணீரை பாசன  விவசாயிகள் மலர்தூவியும், பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.

மேட்டூர் அணையின் கால்வாய் பாசன விவசாயிகள், கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யவும், கால்நடை பராமரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, எடப்பாடிக்கு அருகே உள்ள குள்ளம்பட்டிக்கு கால்வாய்க்கு வந்த மேட்டூர் அணையின் நீரை வரவேற்கும் விதமாக விவசாயிகள் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். மேலும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்