ட்ரெண்டிங்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சேலம் மாநகரில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை- எடப்பாட

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி அருகே உள்ள சங்கர் நகர் பகுதியில் தனியார் அரங்கில் அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி கூட்டம், இன்று (அக்.02) காலை 10.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மக்களை நேரில் சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டத் திட்டங்களை விளக்க வேண்டும். கட்டடத்திற்கு அஸ்திவாரம் போன்றவர்கள் தான் பூத் கமிட்டி உறுப்பினர்கள். காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.

 

தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்பதே முக்கியமான பணியாகும். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் சேலம் மாநகரில் ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உள்ள நிலையில், இன்னும் 5 அடி குறைந்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

 

மேட்டூர் அணையில் எவ்வளவு நீர் உள்ளது? எப்படி பருவமழை பெய்யும் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாத அரசு,என்று குற்றம்சாட்டியுள்ளார்.