ட்ரெண்டிங்

சந்திரயான்- 3 ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது! 

சந்திரயான்- 3 ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது! 

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 என்ற ராக்கெட் மூலம் நாளை (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு குறித்து ஆய்வுச் செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரயான்- 3 திட்டத்திற்கான கவுன்ட்டவுன் 25.30 மணி நேரம் இருக்கும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, இன்று (ஜூலை 13) மதியம் 01.00 மணிக்கு திட்டமிட்டப்படி கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 


3,900 கிலோ எடைக் கொண்ட சந்திரயான்- 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திரயான்- 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வுச் செய்யும். அதேபோல், நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த 2008- ஆம் ஆண்டு சந்திரயான்- 1, 2019- ஆம் ஆண்டு சந்திரயான்- 2 விண்ணில் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.