ஆன்மிகம்

பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்!

பாரம்பரியம் மிக்க வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்! 

ஆடித்திருவிழாவையொட்டி, சேலத்தில் நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். 

சேலம் மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடித்திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை, அம்மாப்பேட்டையில் விமர்சையாக நடைபெற்றது. வேண்டுதல் வைத்து விரதமிருந்த பக்தர்கள் முருகன், நாரதர், வெங்கடாஜலபதி, லட்சுமி, ராமர், சீதை போல் வேடமணிந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வலம் வந்தனர். 

பாராமரியமிக்க இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சிறந்த அலங்கார வண்டிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

குறிப்பாக, சிவன், காளியம்மன் அனிமேஷன் அலங்கார வண்டிகள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. 100- க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த நிலையில், வியாபாரம் படுஜோராக நடந்தது.