ட்ரெண்டிங்

அக்.31- ஆம் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை- சேலம் மாநகராட்சி ஆணையாள

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் மாநகராட்சியின் வரி வசூலிப்பு அதிகாரிகள், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களுக்கு சென்று தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினைச் செலுத்தலாம்.

 

கிரெடிட், டெபிட் கார்டுகள், Gpay, அனைத்து இணையதளப் பணப்பரிவர்த்தனை, வரைவோலை, காசோலை மூலமாகவும் கட்டணங்களை செலுத்த சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2023- 2024 நிதியாண்டின் 2-ம் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் அக்டோபர் மாதம் 31- ஆம் தேதிக்குள் செலுத்தி, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5% ஊக்கத்தொகை (அல்லது) ரூபாய் 5,000 வரை பெற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.