ட்ரெண்டிங்

சேலத்தில் கடல் மீன்களின் விலை சரிவு !

சேலம் மாநகரத்தில் உள்ள வ.உ.சி. மீன் மார்க்கெட்டிற்கு மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருந்து கடல் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது மேட்டூரில் இருந்து வரும் மீன்களின் வரத்துக் குறைந்துள்ள நிலையில், கடல் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.

 

தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், பொதுவாக கோழி, ஆடு, மீன்களின் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. அந்த வகையில், வ.உ.சி. மீன் மார்க்கெட்டில் கடல் மீன்களின் விலை ரூபாய் 80 முதல் ரூபாய் 100 வரை குறைந்துள்ளது.

 

இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ சங்கரா மீன் 300 ரூபாய்க்கும், கண்ணாடி பாறை மீன் 380 ரூபாய்க்கும், வஞ்சரம் மீன் 600 ரூபாய்க்கும் விற்பனையானது. இது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், மீன் வியாபாரம் சரிந்துள்ளது என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

 

பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி, ஆடு இறைச்சிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.