ட்ரெண்டிங்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்! 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்து சேலத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் அலைட் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

200- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணியை சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த பேரணியில் மாணவர்கள் சிலர் நூதன முறையில் சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு சொர்ணபுரி, ஐந்து ரோடு, ஏ.வி.ஆர். ரவுண்டானா வழியாக ஜங்சன் ரயில் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.