ட்ரெண்டிங்

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும் அவலம்!

ரயில்வே சுரங்கப்பாதையில்  மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

சேலம் மாவட்டம், பெரிய கொண்டலாம்பட்டியில் இருந்து பெரியபுதூர் செல்லும் பிரதான சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. 20 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருந்து வரும் இந்த சுரங்கப்பாதையை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியவில்லை.

மழைநீர் வடிந்துச் செல்ல வழியில்லாத காரணத்தால் மழைக்காலங்களில் 3 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அண்மையில் பெய்த மழையினாலும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வுக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.