ட்ரெண்டிங்

6-வது வார்டு பகுதிகளில் சாலைப் பணிகள், வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளது- பகுதிசபா கூ

சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 6-வது வார்டில் உள்ள செட்டிச்சாவடி சாலையில் வார்டு கமிட்டி மற்றும் பகுதிசபா கூட்டம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., முன்னிலையில் நேற்று (செப்.15) நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சேலம் மாநகராட்சிப் பகுதியான வார்டு கமிட்டி மற்றும் பகுதிசபா கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள வார்டுகளில் இக்கூட்டம் பொதுமக்களின் குறைகளை எடுத்து கூறுவதற்கு பகுதிசபா கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 

6-வது வார்டு பகுதிகளில் 21 சாலைப்பணிகள் ரூபாய் 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலும், 4. 3 கி.மீ நீளத்திற்கு ரூபாய் 3 கோடி 40 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகளும், ரூபாய் 8.15 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்தல்,நீர்தேக்க தொட்டி கட்டுதல், குடிநீர் விநியோகம், வடிகால் அமைக்கும் பணி, கான்கிரீட் தளம் அமைத்தல் போன்ற பணிகள் முடிவுற்றுள்ளது. இதே போன்று அனைத்து அடிப்படை வசதிகளும் 60- வது வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

 

அதைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். அதன் அடிப்படையில் பெரியார் நகரில் சாலை அமைத்தல், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், சரஸ்வதி சாலை ஓடை சீரமைத்தல், பெரிய கொல்லப்பட்டி சாலையில் வடிகால் அமைத்து சாலை அமைத்தல், இந்திரா நகர் 6-வது குறுக்குத் தெருவில் வடிகால் அமைத்தல், கௌரிபுரம் கரடு மலைப்பாதையில் புதியதாக கான்கீரிட் சாலை அமைத்த தர வேண்டியும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சுபாஷ் சுந்தர் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.