ட்ரெண்டிங்

உள்ளூர் திட்டக் குழுமக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு! 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளூர் திட்டக் குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையில் இன்று (மார்ச் 06) நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, உள்ளூர் திட்டக் குழுமம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களைத் தலைவராகவும். மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அவர்களை உறுப்பினர் செயலராகவும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்ளூர் திட்டக் குழுமக் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கூடி பொதுமக்களின் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

அந்தவகையில், இன்றையதினம் 2024-ஆம் ஆண்டிற்கான இரண்டாவது உள்ளூர் திட்டக் குழுமக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் உள்ளூர் திட்டப் பகுதியுடன் அதன் எல்லையில் 99 கிராமங்கள் மற்றும் சேலம் இரும்பாலை புதுநகர் வளர்ச்சிக் குழுமப் பகுதியினையும் சேர்த்து சேலம் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 277 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 1,273.20 ச.கி.மீ. பரப்பளவுடன் சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான திருத்திய எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு சேலம் முழுமைத் திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்தி சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான வரைவு முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு இணக்கம் பெறப்பட்டுள்ளது.

மேலும், அரசால் இணக்கம் அளிக்கப்பட்டுள்ள சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத் திட்டத்தின் மீது பொதுமக்களின் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு ஏதுவாக முழுமைத் திட்ட அறிக்கை, வரைபடம். நில உபயோக அட்டவணை மற்றும் முழுமைத் திட்டம் தொடர்பான தகவல்களை அறியும் வண்ணம் தொடங்கப்பட்டுள்ள www.salemlpamasterplan.com என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். மேலும், சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத் திட்டம் தொடர்பான தகவல்களை இதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்en கியூ.ஆர். குறியீடு மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் இணையதள முகவரி மூலமாகவும் மற்றும் க்யூ.ஆர்.குறியீடு மூலமாகவும் முழுமைத் திட்டத்தின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முழுமைத் திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருக்கும் பட்சத்தில் அதனை வருகின்ற 08.04.2024-க்குள் உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர். சேலம் உள்ளூர் திட்டக் குழுமம் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், தளவாய்ப்பட்டி அஞ்சல், சேலம் மாவட்டம் 636 302 தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.