ட்ரெண்டிங்

பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

 

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் வழியாகச் செல்லும் பயணிகள் ரயிலில் பயணிகளின் வசதிக்காக, கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22668), நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22667), கோவை- மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16616), மன்னார்குடி- கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16615, ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22650), சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22649) ஆகிய ரயில் சேவைகளில் தலா ஒரு ஸ்லீபர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.  

 

அதேபோல், சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12243), கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12244), கோவை- மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12084), மயிலாடுதுறை- கோவை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12083) ஆகிய ரயில் சேவைகளில் ஒன் சார் கார் வகுப்பு பெட்டிகள் (One Chair Car Coach) இணைக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி ஒன் சார் கார் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலோ (அல்லது) சேலம் ரயில்வே கோட்டத்தின் சமூக வலைதளப் பக்கத்திலோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.