ட்ரெண்டிங்

ஐந்து ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்"- சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சேலம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் ஐந்து ரயில்கள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12684) இன்று (செப்.12) பெங்களூரு- சேலம் இடையே ஓசூர், தருமபுரி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது. 

 

பெங்களூரு- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 16526) செப்டம்பர் 12, 14, 21, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கண்டோன்மெண்ட்- சேலம் இடையே மாற்றுப் பாதையான ஓசூர், தருமபுரி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில், கிருஷ்ணராஜபுரம், ஒயிட் பீல்டு, மலூர், குப்பம், திருப்பத்தூர், பங்காருபேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்லாது. 

 

ஹஸ்ரத் நிஜாமுதீன்- கோயம்புத்தூர் கொங்கு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12648) செப்டம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் தானே- சேலம் இடையே மாற்றுப் பாதையான கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். அனந்தப்பூர், தர்மாவரம், இந்துப்பூர், யெலங்கா, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களிலும், அந்த ரயில் பாதைகளிலும் செல்லாது.

 

கொச்சுவேலி- ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12778) வரும் செப்டம்பர் 14, 21 ஆகிய தேதிகளில் சேலம்- பனஸ்வாடி இடையே ஓசூர், பையப்பனஹள்ளி வழியாக செல்லும். இந்த ரயில் பங்காருபேட்டை செல்லாது. 

 

கோயம்புத்தூர்- ஹஸ்ரத் நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12647) வரும் செப்டம்பர் 24- ஆம் தேதி அன்று சேலம்- தானே இடையே ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.