ட்ரெண்டிங்

வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரை கைது செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்ப

சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், ரத்னவேல் என்பவரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றாமல், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வந்த நபரை சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசிய சேலம் வட்டாட்சியர் செம்மலை, குப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, இந்திய குடியரசு கட்சியின் கவாய் பிரிவின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (செப்.11) காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, 

இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவின் மாநில தலைவர் பொன்னுதம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடக் கழகம், நாம் தமிழர் கட்சியின் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மாவட்டத் தலைவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கவாய் பிரிவின் மாவட்டச் செயலாளர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வட்டாட்சியரையும், கிராம நிர்வாக அலுவலரையும் கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.