ஆன்மிகம்

ஸ்ரீ பச்சைபட்டினி மாரியம்மன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடந்த மஹா கும்பாபிஷேகம்!

சேலம் மாவட்டம், சிவதாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சைபட்டினி மாரியம்மன் திருக்கோயிலின் ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று (செப்.10) காலை 10.45 மணிக்கு மேல் காலை 11.30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 

முன்னதாக, செப்டம்பர் 08 மற்றும் செப்டம்பர் 09 ஆகிய தேதிகளில் யாக பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று (செப்.10) காலை 07.30 மணியளவில் ஸ்ரீ விக்னேஷ்வர பூஜையுடன் மஹா கும்பாபிஷேகம் துவங்கியது. பின்னர், மதியம் 12.00 மணியளவில் மஹா அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. 

 

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 

 

அதேபோல், 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்புத்துறையைச் சேர்ந்த வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.