இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக, சாராயம் கடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு அருகே உள்ள கருமந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கருமந்துறை காவல்துறையினர், நள்ளிரவில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூலாங்குறிச்சிப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, விசாரணை நடத்தியதில் ஆவர் லாரி டியூப்களில் 400 லிட்டர் சாராயத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.
சாராயம் கடத்திய இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த சாராயத்தைப் பறிமுதல் செய்து, அதனை உடனடியாக அழித்தனர். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


-SXgDfGgJfO.jpg)