ட்ரெண்டிங்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை.... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 06) காலை 08.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 188 கனஅடியில் இருந்து 142 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடிப்படையில் இருந்து 85.16 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 47.29 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், கர்நாடகா மாநிலத்தின் முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி தண்ணீரை எதிர்பார்த்து குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூலை 5- ஆம் தேதி வரையிலான காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 67.5 மி.மீ. ஆகும். ஆனால் 62.4 மி.மீ. அளவுக்கே மழைப் பெய்துள்ளது. இது இயல்பை விட, 8 சதவீதம் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.