ட்ரெண்டிங்

தவெக ஆட்சி கவிழும்” – EPS கடும் விமர்சனம் !

 

தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும்– சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

சேலம்: தமிழக அரசின் செயல்பாடுகள், கரூர் சம்பவம், மின்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

தாதகாப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தவெக அரசு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தயவால் செயல்பட்டு வருவதாகவும், இது நிலையில்லாத ஆட்சி என்றும் தெரிவித்தார்.

சேலம் மாநகரில் கனமழையின்போது தண்ணீர் வெளியேற வழியில்லாத நிலை இருப்பதாகவும், மக்களுக்கு நல்ல குடிநீர் மற்றும் சாலை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வந்தபோது பேரிகார்டுகள் அமைக்க ரூ.4.50 கோடி செலவிட்டதாகக் கூறப்படும் தகவல் குறித்தும் கேள்வி எழுப்பினார். 

தமிழகத்தில் மின்பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய அவர், விசாரணை முடிவுகள் வெளிவந்தால் அரசாங்கத்தின் நிலை என்னவாகும் என்பது தெரியாது என்றார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து வருவதாகவும், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து தவெக அரசு பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், தவெக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.