ட்ரெண்டிங்

சேலத்தில் 13 டன் குட்கா எரித்து அழிப்பு!

 

சேலத்தில் 13 டன் குட்கா பொருட்கள் மின் மயானத்தில் வைத்து அழிப்பு

சேலம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 13 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மின் மயானம் மூலம் எரித்து அழிக்கப்பட்டன.

சேலம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கெங்கவல்லி, மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம் மற்றும் ஏத்தாப்பூர் ஆகிய 7 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 48 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள், சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, சேலம் செவ்வாய்பேட்டை மின் மயானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் முன்னிலையில் சுமார் 13 டன் குட்கா பொருட்கள் மின் மயானம் மூலம் எரிவூட்டப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர் சேஷாத்திரி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.