சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 01- ஆம் தேதி அன்று முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் துவங்கப்படவுள்ளது.12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
நீச்சல் பயிற்சி முகாம் காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை, 08.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரையிலும், 04.00 மணி முதல் 05.00 மணி வரையிலும், 05.00 மணி முதல் 06.00 மணி வரையிலான நேரங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் ஏப்ரல் 13- ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் ஏப்ரல் 27- ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 29- ஆம் தேதி முதல் மே 01- ஆம் தேதி வரையிலும், நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே 13- ஆம் தேதி முதல் மே 25- ஆம் தேதி வரையிலும், ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே 27- ஆம் தேதி முதல் ஜூன் 08- ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். திங்கள்கிழமைகளில் நீச்சல் குளத்திற்கு விடுமுறை. 12 நாட்களுக்குரிய பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 மற்றும் ஜிஎஸ்டி 18% ரூ.220 என மொத்தம் ரூ.1,770 ஆகும். பயிற்சி முகாமானது சிறுவர் மற்றும் சிறுமியர் இருபாலருக்கும் காலை 07.00 மணி முதல் 08.00 மணி வரையும், காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரையும், காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 03.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரையிலான நேரங்களில் நடைபெறும். காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெண்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படும்.
கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத் தொகை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், ATM Card, UPI Code, G Pay, Phone Pay, மூலமாக மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தொகை ரொக்கமாக பெறப்பட மாட்டாது.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

-fronx-cng-6gHod24uTK.jpg )

-hcTFAGMRGb.jpg)