பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
சேலம்:பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப். மற்றும் இ.எஸ்.ஐ. தொகைகளை முறையாகச் செலுத்த வேண்டும் என்றும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழக அரசு ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சமூகநீதி அடிப்படையில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங்



-SXgDfGgJfO.jpg)