ஆன்மிகம்

ஆங்கிலேயர்களை எதிர்க்கும் காட்சிகள் நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது - ராஜேஸ்வரி ஐ.பி.எஸ். பேட

ஆங்கிலேயர்களை எதிர்க்கும் காட்சிகள் நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது  -  ராஜேஸ்வரி ஐ.பி.எஸ். பேட்டி!.

சுதந்திரப் போராட்ட தியாகி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது அமைச்சராக பதவி வகித்த தியாகி கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 25) தமிழகம் முழுவதும் வெளியானது 

இந்த நிலையில், சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மாலில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் வெளியான கக்கன் திரைப்படத்தை கக்கன் பேத்தியும், சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கக்கன் திரைப்படம் எனது தாத்தாவின் படம். அவருடைய உண்மையான வாழ்க்கை வரலாறு, அப்படியே உருவாக்கப்பட்டுள்ளது. படம் ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்கள் அருமையாக உள்ளது. அவருடைய வாழ்க்கை முழுவதும் கொண்டு வரவில்லை. முக்கிய நிகழ்வுகளைத் திரைப்படமாக கொண்டு வந்துள்ளனர்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் நன்றாக உள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடன் தாத்தா உள்ள காலங்களை உருவாக்கி உள்ளார்கள். படத்தின் முடிவில் அவர் உயிரிழக்கும் காட்சி மிகவும் மனதை தொடும் வகையில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அணைகள் கட்டப்படுகின்ற பொழுது கக்கன் ஐயா குரல் கொடுத்த காட்சியும், நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் காட்சிகள் நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது

இந்த திரைப்படத்தை பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பார்க்கலாம். அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு இந்த திரைப்படத்தை பார்த்தால், அரசியல் குறித்து அவர்களுக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.