ட்ரெண்டிங்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையத்தில் ஆய்வு !!!

 

சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிட வழிகாட்டும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த உதவி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,அவர்கள் இன்று (நவ.20) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கான கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டும் வருகின்றது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்து வழங்குவது குறித்தும்.தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிட வழிகாட்டும் வகையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சிஅலுவலகங்கள், அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள்.அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், அனைத்து கிராம ஊராட்சி செயலகங்கள்,அனைத்து வேளாண் அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், பொதுமக்கள் கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளர் உதவி மைய எண்ணையும், அனைத்து வாக்காளர் பதிவு மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்தும் உரிய தகவல்களை பெறலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,அவர்கள் தெரிவித்தார்.